Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தி.மு.க. சென்னைக்காக எதுவும் செய்யவில்லை: முதல்வர் குற்றச்சாட்டு!

In இந்தியா
Updated: 17:28 GMT, Nov 10, 2017 | Published: 09:42 GMT, Nov 10, 2017 |
0 Comments
1284
This post was written by : Kemasiya

தற்போதைய தமிழக அரசின் ஆட்சி கலைக்கப்படும் என தெரிவித்த மு.க.ஸ்டாலின், தனது பத்து வருட ஆட்சியில் சென்னைக்காக எதுவுமே செய்யவில்லை என,  முதல்வர் பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

தேனி மாவட்டத்தில்,  நேற்றைய தினம் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் இடம்பெற்ற,  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

கடும் வறட்சி வந்தாலும் தற்போதைய அரசை கலைப்போம் என ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவரின் மனதில் மக்களுக்கு சேவை செய்யும் என்னம் இல்லை. ஆட்சியை கலைப்பதே நோக்கம்.

அதே போன்று பத்து வருடங்கள் பதவியில் இருக்கும் ஸ்டாலின்,  சென்னைக்காக எதுவும் செய்யவில்லை. அப்படியிருக்கையில் தமிழக அரசு எதையும் செய்யவில்லை என பொய் கூறுவது அபாரமானது. நாம் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டுவருவதோடு அவற்றை நிறைவேற்றி வருகின்றோம்.

மேலும் அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சையையும் நானும் பன்னீர்ச்செல்வமும் இணைந்து காப்போம் என,  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg