Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு மாவட்டத்தின் புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர் கௌரவிப்பு!

In இலங்கை
Updated: 08:18 GMT, Nov 10, 2017 | Published: 08:18 GMT, Nov 10, 2017 |
0 Comments
1273
This post was written by : Ravivarman

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையில் புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் இம்முறை இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய 51 மாணவர்கள் நேற்றையதினம் (வியாழக்கிழமை) பரிசில்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான வாயிலில் இருந்து மாணவர்களின் பாண்ட் வாத்திய அணியின் இசை வரவேற்புடன் புதுக்குடியிருப்பு நகர் வழியாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்கம் வரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வட.மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கௌரவிப்புக்களையும் பரிசில்களையும் வழங்கிவைத்தார்.

அத்துடன், இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு.சி.சுப்பிரமணியேஸ்வரன், புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அதிபர் செ.இரவீந்திரரசா, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை வைத்தியர் ப.தயானந்தரூபன், முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலக அதிகாரி புதுக்குடியிருப்பு இலங்கை வங்கி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg