Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச அபிவிருத்தி செயலாளராக பிரெக்சிற் தீவிர ஆதரவாளர் நியமனம்

In
Published: 08:30 GMT, Nov 10, 2017 |
0 Comments
1317
This post was written by : Risha

பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி செயலாளராக, பிரெக்சிற் தீவிர ஆதரவாளர் ஒருவர் பிரதமர் தெரேசா மே-யினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அபிவிருத்தி செயலாளர் பிரீத்தி பட்டேலின் பதவி விலகலை தொடர்ந்து, பென்னி மோர்ட்டன்ட் அப்பதவிக்கு நேற்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊனமுற்றோருக்கான அமைச்சராக இருந்த பென்னி, பிரீத்திபட்டேல் பதவி விலகியதை அடுத்து அவரது இடத்துக்கு பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்த பென்னி மோர்ட்டன்ட், ”சர்வதேச அபிவிருத்தி செயலாளராக, பிரதமர் மேயினால் நியமிக்கப்பட்டுள்ளமையை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரித்தானிய மக்களுக்கு பெருமையளிக்கும் வகையில், வளமான, பாதுகாப்பான நாட்டை உருவாக்க அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவேன் என இத்தருணத்தில் உறுதி பூணுகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி செயலாளர் பிரீத்தி பட்டேல் நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg