Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரியாணி இலைகளில் அடங்கியுள்ள எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள்!

In
Published: 09:07 GMT, Nov 10, 2017 |
0 Comments
1782
icon_com
This post was written by : Anojkiyan
bri

பிரியாணி இலை அல்லது இலவங்கபத்திரி சமையலில் நறுமணப் பொருளாக சேர்க்கப்படுகிறது. இந்த அரோமேட்டிக் இலை மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படும் பே லாரல் மரத்திலிருந்து கிடைக்கிறது.

இந்த இலையில், அரோமேட்டிக் பொருளில் ஆன்டி பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள், டையூரிடிக் மற்றும் கட்டுப்படுத்துகிற பொருட்கள் போன்ற ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

வாய்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற சீரண பிரச்சினைகளை இது சரி செய்கிறது. தொடர்ந்து சீரண பிரச்சினைகளான மலச்சிக்கல், அமிலத்தன்மை, தொடர்ச்சியில்லாமல் மலம் கழித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பிரியாணி இலைகளை போட்டு ஒரு கப் டீ குடித்தால் போதும் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக மாறும்.

இதயம் சம்பந்தமான நோய்களுக்கு குறித்த இலை சரியான மருந்தாகும் இந்த இலையில் உள்ள பைடோநியூட்ரியன்ட்ஸ் மாரடைப்பு மற்றும் பக்க வாதம் போன்றவற்றிலிருந்து காக்கிறது.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு இந்த இலைகள் உதவும்.

மாதவிடாய் பிரச்சினை, மன அழுத்தம், போன்ற பிரச்சினைகளுக்கு இந்த இலைகள் சிறந்த தீர்வாகும். இந்த பிரியாணி இலையில் உள்ள கெமோபுரோடெக்டிவ் பொருட்களான கேஃபிக் ஆசிட், க்யூயர்சிடின், யூஜினால், கேட்டசின்கள் போன்றவை புற்று நோய்க்கு எதிராக செயல்படுகின்றன. இதில் உள்ள பார்த்தேனலாய்ட் கர்ப்பப்பை வாய் புற்று நோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)