நன்கு திட்டமிடப்பட்ட பாதீடே சமர்பிக்கப்பட்டது – மஹிந்த அமரவீர
எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உயரிய அளவில் திட்டமிடப்பட்ட வரவு செலவுத் திட்டமே 2018 ஆம் ஆண்டுக்காக நேற்று சமர்பிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பாதீடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்ததோடு, மீன்பிடி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் தான் திருப்தியடைவதாகவும் கூறினார்.
மேலும் கூட்டு எதிரணி நிதி அமைச்சரின் பாதீடு உரையை கவனிக்காது செயற்பட்டதால் அது தொடர்பான பூரண தெளிவின்றி பேசுவதாகவும் அவர் கூறினார்.
மஹிந்த அணியினர் சைக்கிளில் வருகைதந்து அனைவருக்கும் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் தானும் அதனை பரீட்சித்து பார்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.