Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா மாவட்டத்தில் மர நடுகை நிகழ்ச்சித்திட்டம்!

In இலங்கை
Published: 09:37 GMT, Nov 10, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Ravivarman
download (3)

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில், விவசாய வனவியல் திட்டத்தின் கீழ் 0.8 மில்லியன் ரூபாய் செலவில் மர நடுகை நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

இதற்கான பயனாளிகள் தெரிவு ஒவ்வொரு விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலுமிருந்து 100 பயனாளிகள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு, 1000 பயனாளிகளுக்கு 9 வகையான பழமரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின், விவசாய வனவியல் திட்டத்தின்கீழ் ஆச்சிபுரம், கற்பகபுரம், சுந்தரபுரம், மாதர்பனிக்கர்மகிழங்குளம், மருதோடை, ஊஞ்சல்கட்டி, பரசன்குளம், பெரியகட்டு, பெரியதம்பனை, மீடியாபாம், கங்கன்குளம், மகாகச்சக்கொடி, மாமடு, ஈரப்பெரியகுளம், மற்றும் உலுக்குளத்தில் 400 ஏக்கர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 1000 பயனாளிகளுக்கே இம் மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 2017 ஆண்டு ஒதுக்கீட்டின் பிரகாரம் விவசாய வனவியல் திட்டத்தின் கீழ், 11 கிராமங்களில் உள்ள வீட்டுப்புறச்சூழல் பயன்தரும் பழமரங்களின் விநியோக நிகழ்வும் நடுகையும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

அத்துடன், வட.மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேசசெயலாளர் பிரிவுகளிலுமிருந்து 04 மீள்குடியேற்றக் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு பழமரக்கன்றுகள் கார்த்திகை மாத மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

மரநடுகை மாதத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு நடாத்த கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)