Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோனிக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யலாம்: கங்குலி

In கிாிக்கட்
Updated: 09:34 GMT, Nov 10, 2017 | Published: 09:34 GMT, Nov 10, 2017 |
0 Comments
1479
This post was written by : Elakkiya

தோனி தனது விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தாத பட்சத்தில் மாற்று வீரரை தேர்வு செய்யலாம் என இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தோனியின் விளையாட்டு செயல்திறன் குறித்து பல்வேறான விமர்சனங்கள் வெளியாகிவருகின்ற நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “தோனியுடன் கலந்துரையாடி அவருடைய பொறுப்புக்கள் தொடர்பில் அணி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 20 ஓவர் கிரிக்கட்டில் தோனி மிகப்பெரிய வீரராவார். இந்த விடயத்தில் முடிவு எடுப்பதற்கு முன்பாக அவர் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, “எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் தோனியின் நிலைப்பாடு தொடர்பில் அணி நிர்வாகம் நிச்சயம் சிந்திக்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் தோனியால் தனது ஆட்டத்திறனில் முன்னேற்றம் காண முடியாத பட்சத்தில் மாற்று ஏற்பாட்டுக்கு அணி நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும். அதேபோன்று தோனியை துடுப்பாட்டத்தில் முன்வரிசையில் களமிறக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg