Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நினைவு தினத்தை முன்னிட்டு “பிக்பென்” மீண்டும் ஒலித்தது

In
Published: 12:44 GMT, Nov 10, 2017 |
0 Comments
1273
icon_com
This post was written by : Risha
Big-Ben-repairs

லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் உள்ள பிக்பென் மணிக்கூடு மூன்று மாதங்களின் பின்னர் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் ஒலித்துள்ளது.

போர் வீரர்களின் நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், பிக் பென் மணிக்கூடு இயங்க ஆரம்பித்துள்ளது.

இம்மணிக்கூடானது மணித்தியாலத்திற்கு ஒருமுறை ஒலிக்கப்பட்டு, நாளை ஒரு மணியுடன் மீண்டும் அமைதியாகி பின்னர், புது வருடத்தில் மீண்டும் ஒலிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிக்பென் மணிக்கூடானது, திருத்தப் பணிகளுக்காக 157 ஆண்டுகளில் முதன் முறையாக இக்கடிகாரம் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதல் முடங்கியது.

இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தின் திருத்தப் பணிகள் 2021ஆம் ஆண்டுடன் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg