Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வருமான வரித்துறையின் திடீர் சோதனை: சிக்கியது 60 போலி நிறுவனங்கள்!

In இந்தியா
Updated: 10:09 GMT, Nov 10, 2017 | Published: 10:09 GMT, Nov 10, 2017 |
0 Comments
1644
This post was written by : Kemasiya

வருமான வரித்துறையினர் மேற்கொண்டுவரும் ‘operation click black momy’ என்னும் சோதனையில், 60 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தொடங்கிய இந்த சோதனை, சில முக்கிய இடங்களில் இன்றும் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில், ஊடகவியலாளர்களை சந்தித்த வரித்துறை அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில்  அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறித்த சோதனையின் போது எவ்வளவு கருப்புபணம் கைப்பற்றப்பட்டது மற்றும் சசிகலாவின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் 317 வங்கிக் கணக்கு உட்பட, பிடிபட்டுள்ள ஆவணங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தஞ்சையில் 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg