Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான அரிசிமா புட்டு செய்யும் முறை!

In
Updated: 10:16 GMT, Nov 10, 2017 | Published: 10:16 GMT, Nov 10, 2017 |
0 Comments
1342
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்:

அரிசிமா(வறுத்தது) – 3 டம்ளர்
தண்ணீர் (கொதித்தது) – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பூ, தேவையான அளவு(விரும்பினால்)

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசிமா, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும். குழைத்த மாவை கிரைண்டரில் போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும் அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு உருண்டைகளான புட்டு பதத்திற்கு குழைக்கவும். புட்டு பானையை எடுத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் புட்டு குழலை அல்லது கொதிநீர் பாத்திரத்தை (ஸ்டீமர்) வைத்து அதனை அடுப்பில் வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்து நீராவி வரத்தொடங்கியதும் புட்டு குழலை அல்லது கொதிநீர் பாத்திரத்தை வெளியே எடுத்து அதில் கொஞ்சம் அரிசிமாவை போடவும் அதன் பின்பு கொஞ்சம் தேங்காய் பூவை போடவும். அதன் பிறகு திரும்பவும் அரிசிமாவை போடவும்.

அதன் பின்பு தேங்காய் பூவை போடவும் இப்படியே குழல் அல்லது கொதிநீர் பாத்திரம் நிரம்பும் வரை அரிசிமாவையும் தேங்காய் பூவையும் மாறி மாறி போடவும். குழைத்த அரிசிமா நிரம்பிய புட்டு குழலை அல்லது கொதிநீர் பாத்திரதம் புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில் அவிய விடவும். புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை அல்லது கொதிநீர் பாத்திரத்தை வெளியே எடுத்து அதிலுள்ள புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும். இப்படியே குழைத்த எல்லா மாவையும் புட்டாக அவிக்கவும். அதன் பின்பு ஒரு சாப்பாட்டு கோப்பையில் அவித்த புட்டை வைத்து பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg