Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா வளாகம் நடத்தும் தொழிற்சந்தை!

In இலங்கை
Published: 10:01 GMT, Nov 10, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : Ravivarman

யாழ் பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகின்றது.

இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரு நாட்களும் காலை 9.00 மணிதொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் பிரபலமான 30 இற்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் நேரடியாக பங்குகொண்டுள்ளதுடன், வேலைவாய்ப்புக்களையும் வழங்கவுள்ளன.

அத்துடன் நாளை நடைபெறவிருக்கும் தொழிற்சந்தைக்கான நிகழ்விற்கு வவுனியாவிலிருந்து பம்பைமடுவிற்கு விசேட பேரூந்து சேவைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன என்பதுடன் இலவச தொழில் வழிகாட்டி கருத்தரங்குகள் இரண்டு நாட்களுக்கு இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தொழில் தேடி வருபவர்கள் தங்கள் சுய விபரக்கோவையின் பல பிரதிகளை எடுத்து வருமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)