Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊக்கமருந்துக்கு எதிரான மேன்முறையீட்டு குழுவில் ஷேவாக்

In கிாிக்கட்
Updated: 09:57 GMT, Nov 10, 2017 | Published: 09:56 GMT, Nov 10, 2017 |
0 Comments
1281
This post was written by : Elakkiya

இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வீரேந்திர ஷேவாக் ஊக்கமருந்துக்கு எதிரான மேன்முறையீட்டு குழு உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.வி. ஈஸ்வர் தலைமையிலான ஆறுபேர் கொண்ட குறித்த குழுவில் ஷேவாக்குடன் சேர்ந்து மற்றுமொரு முன்னாள் கிரிக்கட் வீரரான வினய் லம்பாவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர, மூத்த வழக்கறிஞர் விபா தத்தா மாஹிஜா, மருத்துவர் நவீன் டங் மற்றும் ஹர்ஷ் மஹாஜன் ஆகியோரும் ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான மேன்முறையீட்டு குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) சுமார் 2 மணிநேரம் இடம்பெற்றிரு;த போதிலும் ஷேவாக்  அதில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg