Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோனியை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: கம்பீர்

In கிாிக்கட்
Updated: 10:11 GMT, Nov 10, 2017 | Published: 10:09 GMT, Nov 10, 2017 |
0 Comments
1473
icon_com
This post was written by : Elakkiya
1457436302-3839

இந்திய அணியின் மூத்த வீரர் மகேந்திரசிங் தோனிக்கு பெருமை சேர்க்க வேண்டுமே தவிர அவரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அணியின் மற்றுமொரு வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

தோனியின் அண்மைக்கால விளையாட்டு திறன் தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் கம்பீர் இவ்வாறு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கிரிக்கட்டுக்காக தோனி செய்த பலவற்றை பலர் செய்யவில்லை. குறிப்பாக அணி தோல்வியடையும் போது தோனி அதனை கையாளும் விதம் சிறப்பானது. இங்கிலாந்து, அவுஸ்ரேலிய டெஸ்ட் தொடர்களை இந்திய அணி முழுமையாக இழந்தபோது தோனி அமைதியாக சூழ்நிலையை கையாண்டார். உணர்ச்சி வசப்படவில்லை. இந்த விடயத்தில் தோனிக்கு பெருமை சேர்க்க வேண்டியது அவசியம். வெற்றியை கையாள்வது இலகுவானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கங்குலி, டிராவிட், ஷேவாக் மற்றும் தோனி ஆகியோரின் தலைமையில் விளையாடியதாக குறிப்பிடும் கம்பீர் தோனியின் தலைமையில் விளையாடியதை மகிழ்ச்சியாக உணர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg