Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரலாற்றில் இடம்பிடித்த பெண் இசையமைப்பாளர்!

In சினிமா
Published: 11:02 GMT, Nov 10, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Vithushagan
2

தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாயக 19 வயது பெண் ஒருவர் திரைப்படம் ஒன்றிற்கு இசையமைத்து வரலாற்றில்   இடம் பிடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் குட்டிக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படத்துக்கு 19 வயதுடைய  சிவாத்மிகா இசையமைத்துள்ளர்.

ஆண்டனி புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆண்டனி’. அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் இயக்கும் இப்படத்தில் ‘சண்டக் கோழி’ புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், பர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் வெளியிட்டார். சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)