Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயிலில் வியாபாரம் செய்வதற்கு தடை!

In இலங்கை
Updated: 17:25 GMT, Nov 10, 2017 | Published: 13:07 GMT, Nov 10, 2017 |
0 Comments
1398
This post was written by : Ravivarman
_e7cac216-7626-11e5-bc61-5d96ac0074a6

ரயிலில் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்.எம் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரயிலுக்குள் வியாபாரம் செய்வதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும், உணவுப் பொருட்களின் சுகாதாரம் தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனடிப்படையில், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ரயிலில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தினைக் கருத்திற்கொண்டு பிரதான ரயில் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய ரயில் நிலையங்களில் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு தடையில்லை” என எஸ்.எம் அபேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg