Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

In இலங்கை
Published: 13:44 GMT, Nov 10, 2017 |
0 Comments
1381
icon_com
This post was written by : Vithushagan

சீன இராணுவத்தின் குய் ஜிகுவாங் போர் பயிற்சி கப்பலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

உத்தியோகபூர்வமாக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர்.

சுமார் 165.3 மீற்றர் நீளமும் 9000 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப்பல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுமூக உறவை மேலும் வலுப்படுத்தல், அனுபவ பரிமாற்றம், மற்றும் பயிற்சிகளுக்காக இலங்கை வந்துள்ள இந்த போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் போது, இலங்கை கடற்படையினருடன் பல்வேறு நிபுணத்துவ பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, இந்த சீன போர் பயிற்சி கப்பலை பார்வையிடுவதற்கான பொதுமக்களுக்கு வாய்ப்புகள்  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg