Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாளை மறுதினம் “நினைவுகூரும் ஞாயிறு” (REMEMBRANCE SUNDAY 2017 )

In
Updated: 14:29 GMT, Nov 10, 2017 | Published: 14:15 GMT, Nov 10, 2017 |
0 Comments
1367
This post was written by : S.K.Guna

பிரித்தானியாவிலும் பொதுநலவாய நாடுகளிலும் பொப்பி மலர் நாள் (REMEMBRANCE DAY) ஒவ்வொரு ஆண்டும் நொவம்பர் மாதம் அனுஷ்டிக்கப்படுவைத்து வழமையாகும்.

இந்த நினைவுகூரும் நாளானது ஒவ்வொரு ஆண்டும் நொவம்பர் மாதம் முற்பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு, முதலாம் உலகப் போரில் தமது உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி அனுஷ்டிக்கப்படுகிறது.

1918 ஆம் ஆண்டு நொவெம்பர் 11 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும்  இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் 1914 – 1918 முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

இவ்வாண்டு முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 99 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.

பிரித்தானிய அரசின் உத்தியோக பூர்வ பொப்பி மலர்கள் நாள் (REMEMBRANCE DAY) நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் முற்பகல் 11 மணியில் இருந்து   11 .02 வரை இரண்டு நிமிடங்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

இவ்வாண்டு நினைவு கூரும் ஞாயிறு (REMEMBRANCE SUNDAY 2017)  நொவம்பர் 12 ஆம், லண்டன், வெஸ்ட்மின்ஸ்ரரில் உள்ள வைட்ஹோலில் (Whitehall) நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg