Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதி

In இலங்கை
Published: 15:04 GMT, Nov 10, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Vithushagan
ranil-maithiri

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடந்து உரையாற்றிய ஜனாதிபதி ”பாடசாலைகள், வீதிகள், வீடுகள் உள்ளிட்ட முழு சமூக சூழலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இடங்களாக இருக்க வேண்டும்.

சிறுவர்களின் நடத்தைகளை விளங்கிக்கொண்டு வளர்ந்தவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதுடன், வெளிச் சூழலில் காணுகின்ற விடயங்களை வைத்து தீர்மானங்களை மேற்கொள்ளாது அவர்கள் உள்ளார்ந்த ரீதியாக முகங்கொடுத்துள்ள உள, உடல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக கண்டறிய வேண்டும் .

“சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்பதுடன், இதற்காக மூன்றாண்டு திட்டத்திற்காக 524 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அனைத்து அரசாங்க அதிகாரிகளும் குறித்த நிறுவனங்களுடன் இணைந்து பொறுப்புடன் செயற்படுவார்களென தான் நம்புகின்றேன்.

நாட்டின் பொதுச் சட்டங்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து உள்ள சட்ட நிலைமை தொடர்பில் பாடசாலை மற்றும் கிராமிய மட்டத்தில் சிறுவர்களுக்கு அறிவூட்டுவதற்கு சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றை நாடெங்கிலும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)