Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதியில் ஊழல் விவகாரங்களில் சிக்கியுள்ள மூத்த இளவரசர்கள்!

In உலகம்
Updated: 15:33 GMT, Nov 10, 2017 | Published: 15:33 GMT, Nov 10, 2017 |
0 Comments
1236
This post was written by : Anojkiyan

சவுதி அரேபியாவில் பரவலாக பேசப்பட்டுவரும் ஊழல் விவகாரங்களில், சில மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் செல்வாக்குள்ள தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக பொது வழக்கறிஞ்சர் ஷேய்க் சௌத் அல்-மொஜீப் தெரிவித்துள்ளார்.

சவுதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு உயர்மட்ட குழு, கடந்த சில ஆண்டுகளாக, திட்டமிடப்பட்ட ஊழல் மற்றும் கையாடல் செய்ததன் மூலம் குறைந்தது 100 பில்லியன் டொலர்கள் நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதனை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஷேய்க் சௌத் அல்-மொஜீப் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக தற்போது 201 பேர் விசாரிக்கப்பட உள்ளனர். இந்த தவறுகளை இழைத்தவர்களுக்கு எதிரான ஆதாரம் வலுவாக உள்ளது.

இதுவரை விசாரணைக்காக 208 தனிநபர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 7 பேர் மட்டுமே குற்றச்சாட்டுகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg