Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெர்சல் படத்தில் விஜய் கூறிய கருத்து உண்மை: மிதுன் குமார்

In சினிமா
Updated: 15:38 GMT, Nov 10, 2017 | Published: 15:38 GMT, Nov 10, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Vithushagan
201711101707362714_1_Mithun-Kumar1._L_styvpf (1)

மெர்சல் படத்தில் விஜய் மருத்துவத்துறை தொடர்பாக கூறிய கருத்துக்கள் 200 சதவீதம் உண்மை, இவ்வாறான பிழைகளை நிச்சயம் சுட்டிக்காட்டபட வேண்டும் என களத்தூர் கிராமம் படத்தில் நடித்த மிதுன் குமார் தெரிவித்துள்ளார்.

திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், 2 படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தனது சினிமா வாழ்க்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“உதவி இயக்குனராக இருந்த நான், இந்த படத்தில் நடிக்க காரணம் இயக்குனர் மகிழ்திருமேனி தான். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆசை. என்றாலும், வில்லனாக நடிப்பதில் தான் அதிக ஆர்வம் இருக்கிறது.

நாடகத்தில் நடிக்கும் போது கூட எனது கண்கள், சிரிப்பு ஆகியவற்றை பார்த்து பெரும்பாலும் வில்லன் வேடங்களே தேடிவந்தன. தமிழில் மட்டுமல்ல தென் இந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

அடுத்து ‘கடமை’ குறும்படத்துக்கு தேசிய விருது வாங்கிய இயக்குனர் ரத்னசிவா, சமுத்திரகனி உதவியாளர் ரடான் ராஜா இயக்கும் படங்களில் நடிக்கிறேன்.

‘மெர்சல்’ படத்தில் விஜய் சார் மருத்துவமனைகள் பற்றி பேசிய வசனங்கள் உண்மைதான். நானே ஒரு விபத்தில் சிக்கினேன். என்னுடன் காரில் இருந்தவர் இறந்தார். ஒரு மருத்துவமனையில் என்னை சேர்த்தார்கள்.

அங்கு வைத்தியருக்கு பதிலாக அனுபவம் இல்லாத தாதி என்னை பரிசோதித்து விட்டு நான் பிழைக்க மாட்டேன் என்று சொல்லி பிணத்தோடு கிடத்தி விட்டார்கள். நல்ல வேளையாக எனது நண்பர்கள் என்னை வேறு மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தேன்.

ஆனால் தராமல் ஏமாற்றுகிறார்கள். மெர்சல் படத்தில் விஜய் சார் சொன்னது 200 சதவீதம் உண்மை. தப்பை தப்பு என்று தான் சொல்ல வேண்டும்” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)