மெர்சல் படத்தில் விஜய் கூறிய கருத்து உண்மை: மிதுன் குமார்

மெர்சல் படத்தில் விஜய் மருத்துவத்துறை தொடர்பாக கூறிய கருத்துக்கள் 200 சதவீதம் உண்மை, இவ்வாறான பிழைகளை நிச்சயம் சுட்டிக்காட்டபட வேண்டும் என களத்தூர் கிராமம் படத்தில் நடித்த மிதுன் குமார் தெரிவித்துள்ளார்.
திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், 2 படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தனது சினிமா வாழ்க்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“உதவி இயக்குனராக இருந்த நான், இந்த படத்தில் நடிக்க காரணம் இயக்குனர் மகிழ்திருமேனி தான். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆசை. என்றாலும், வில்லனாக நடிப்பதில் தான் அதிக ஆர்வம் இருக்கிறது.
நாடகத்தில் நடிக்கும் போது கூட எனது கண்கள், சிரிப்பு ஆகியவற்றை பார்த்து பெரும்பாலும் வில்லன் வேடங்களே தேடிவந்தன. தமிழில் மட்டுமல்ல தென் இந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
அடுத்து ‘கடமை’ குறும்படத்துக்கு தேசிய விருது வாங்கிய இயக்குனர் ரத்னசிவா, சமுத்திரகனி உதவியாளர் ரடான் ராஜா இயக்கும் படங்களில் நடிக்கிறேன்.
‘மெர்சல்’ படத்தில் விஜய் சார் மருத்துவமனைகள் பற்றி பேசிய வசனங்கள் உண்மைதான். நானே ஒரு விபத்தில் சிக்கினேன். என்னுடன் காரில் இருந்தவர் இறந்தார். ஒரு மருத்துவமனையில் என்னை சேர்த்தார்கள்.
அங்கு வைத்தியருக்கு பதிலாக அனுபவம் இல்லாத தாதி என்னை பரிசோதித்து விட்டு நான் பிழைக்க மாட்டேன் என்று சொல்லி பிணத்தோடு கிடத்தி விட்டார்கள். நல்ல வேளையாக எனது நண்பர்கள் என்னை வேறு மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தேன்.
ஆனால் தராமல் ஏமாற்றுகிறார்கள். மெர்சல் படத்தில் விஜய் சார் சொன்னது 200 சதவீதம் உண்மை. தப்பை தப்பு என்று தான் சொல்ல வேண்டும்” என்றார்.