Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பியரை விடவும் மென்பானங்கள் ஆபத்தானவை : மங்கள சமரவீர

In இலங்கை
Published: 16:05 GMT, Nov 10, 2017 |
0 Comments
1324
icon_com
This post was written by : Vithushagan
b1a0656565_09112017_ARR_GRY

மென்பானங்களில்  100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். ஆயினும் பியர் ஏற்படுத்தும் பாதிப்பு இதைவிட குறைவானதாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி பியர் வரி குறைப்பு தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மென்பானங்களில் சீனிக்கான வரி 20 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் பியருக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் பியர் தயாரிப்பின் போது ஒரு நாளைக்கு 300 பொதி சீனி பிரயோகம் செய்யப்படுகின்றது” என்று ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாடுகளில் பொதுவாக அதியுச்ச காரம் கொண்ட மதுபானங்களுக்கு பதிலாக குறைந்த காரம் கொண்ட பியரையே அருந்துகின்றனர். குறிப்பாக பியர் அருந்தும் வீதம் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகத்தான் அதிகூடிய காரம் கொண்ட மதுபானங்களின் விலையினை அதிகரித்துள்ளதுடன் பியரின் விலையை குறைத்துள்ளோம். எனினும் மென்பானங்களை பொறுத்தவரை மாணவர்கள் அருந்தும் 40 மில்லிலீற்றர் மென்பானத்தில் 100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். ஆயினும் பியர் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவானது என்று அவர் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)