Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச வர்த்தக தடைகளுக்கு முன்னாள் ஆட்சியாளர்களே காரணம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

In
Published: 16:21 GMT, Nov 10, 2017 |
0 Comments
1261
icon_com
This post was written by : Anojkiyan
US-President-Donald-Trump-boards-Air-For

சர்வதேச சந்தையில் உள்ள அமெரிக்கா மீதான தடைகளை ஏனைய நாடுகள் தளர்த்தாதற்கு, முன்னாள் ஆட்சியாளர்களே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தொடர்ச்சியான வர்த்தக முறைகேடுகளை அமெரிக்கா இனிமேலும் பொறுத்துக்கொள்ளாது. அமெரிக்காவின் நலன்களையே நான் எப்போதும் முதன்மையாக வைப்பேன். ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு நாடுகளும் அதற்குப் பதிலாக நியாயமான வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உறுப்பு நாடுகள் அனைத்தும் விதிமுறைகளை மதிக்காவிட்டால் இந்த அமைப்பு முறையாக செயல்பட முடியாது.

சர்வதேச சந்தையில் உள்ள தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. பிற நாடுகளுக்கு வர்த்தகம் கட்டணங்களைக் குறைத்துள்ளது. அதை மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு செய்யவில்லை. அது பல அமெரிக்கர்களைப் பாதித்துள்ளது. இதற்கு தமக்கு முன்னால் இருந்த அமெரிக்க அரசுகளே இந்தப் பாதிப்புகளுக்குக் காரணம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg