Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிநாட்டு நாணயங்களுடன் விமான நிலையத்தில் நால்வர் கைது!

In இலங்கை
Updated: 17:44 GMT, Nov 10, 2017 | Published: 17:26 GMT, Nov 10, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Vithushagan
srilanka

இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திச் செல்ல முயற்சித்த நான்கு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 இலட்சத்து 8 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டொலர்கள், இலங்கை ரூபாவின்படி 3 கோடியே 23 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதி என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பறிமுதல் செய்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg