Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மமதையோடு இருந்த அரசு தமிழர் பகுதிகள் குறித்து கவனம் செலுத்தியமை வரவேற்கத்தக்கது : சிறிதரன்

In இலங்கை
Published: 03:26 GMT, Nov 11, 2017 |
0 Comments
1280
This post was written by : Arul Jesu

யுத்தத்தை வெற்றிக்கொண்டு மமதையோடு இருந்தவர்கள் தற்போது வடக்கு கிழக்கு மக்களை அவதானிக்க ஆரம்பித்திருப்பது வரவு செலவு திட்டத்தின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் புலப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் நேற்று இடம்பெற்ற போது அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு முழுவதிலும் சனத்தொகை பெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் பொழுதுபோக்கிற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டாலும் கிளிநொச்சியில் காணப்படும் கலாசார நிலையம் இராணுவத்தினரின் வசிப்பிடமாக மாறியுள்ளமை கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டங்களை வரவேற்பதாக தெரிவித்த அவர், ஆனால் அரசாங்கம் வரையறைகளை தளர்த்தி இதனை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் விரும்பக்கூடிய நிலையான அரசியல் தீர்வை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg