Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லெபனானுக்கு மீது சவுதி போரை அறிவித்துள்ளது: ஹெஸ்புல்லாத் தலைவர் குற்றச்சாட்டு

In உலகம்
Published: 05:11 GMT, Nov 11, 2017 |
0 Comments
1778
icon_com
This post was written by : Suganthini

லெபனான் பிரதமராக இருந்த ஸாட் அல்; ஹரிரி தனது ராஜினாமாவை அறிவித்துச் சில நாட்களின் பின்னர் லெபனானுக்கு எதிராகப் போரை சவுதி அரேபியா அறிவித்துள்ளதாக, ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொலைக்காட்சிச் சேவையொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) தோன்றி உரையாற்றியபோதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

லெபனானின் முன்னாள் பிரதமர் ஸாட் அல் ஹரிரியின் விருப்பத்துக்கு மாறாக, சவுதி அரேபியா அவரை வைத்துக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை சவுதி அரேபியா தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அச்சேவையில் அவர் மேலும் உரையாற்றியபோது, ‘லெபனானியர்களுக்கிடையில் போரைத் தூண்டிவிட சவுதி அரேபியா முயன்றுள்ள நிலையில், லெபனானுக்கு எதிராகவும் ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் சவுதியும் அந்நாட்டு அதிகாரிகளும் போரை அறிவித்துள்ளனர்.

லெபனானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கான பணத்தை வழங்க சவுதி தயாராகின்றதென்பதுடன், இது ஆபத்தானது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

இம்மாதம் 4ஆம் திகதி, ரியாத்தில் தொலைக்காட்சிச் சேவையொன்றில் தோன்றிய லெபனானின் முன்னாள் பிரதமர் ஸாட் அல் ஹரிரி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதன் காரணமாக தனது பதவியை ராஜினாமாச் செய்வதாகவும்; கூறியிருந்தார். இந்நிலையில், ஸாட் அல் ஹரிரி நாடு திரும்ப வேண்டுமென்று லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சவுதியில் ஸாட் அல் ஹரிரி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, லெபனானின் முன்னாள் பிரதமர் ஸாட் அல் ஹரிரியின் ராஜினாமாவை லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் ஏற்றுக்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg