Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் மூன்றாவது நாளாகவும் வருமான வரித்துறையினர் சோதனை!

In இந்தியா
Published: 05:30 GMT, Nov 11, 2017 |
0 Comments
1091
icon_com
This post was written by : Vithushagan
201711110859458879_IT-raids-continue-for-third-day-at-Jaya-TV-premises-and_SECVPF

சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) வருமானவரித் துறையினரின் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சசிகலா மீது உழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய  இடங்களில் சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் நடை பெற்று வருகின்றது.

நேற்று முன்தினம் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் ஆரம்பித்த இந்த சோதனையானது, நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், ஜெயா டிவி தலைமைச் செயல் அதிகாரி விவேக் வீடு, தினகரன், நடராஜன் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், கம்பெனி ஊழியர்களின் வீடுகள் என கோடநாடு வரை நீடித்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 187 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் முதல் நாளில் சோதனை நிறைவடைந்தது. நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது.

நீலாங்கரையில் உள்ள டி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரன் வீட்டில் கணக்கில் வராத தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

அத்தோடு, ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் வீட்டில் சோதனை நிறைவடைந்துள்ளது. தஞ்சையில் சசிகலாவின் கணவர் எம்.நடராஐன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்தது. நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் இன்றும் சோதனை தொடர்கிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)