Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டைக்குடியுரிமை: அவுஸ்ரேலியாவில் ஜோன் அலெக்சாண்டர் ராஜினாமா

In
Updated: 10:05 GMT, Nov 11, 2017 | Published: 10:05 GMT, Nov 11, 2017 |
0 Comments
1263
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியாவில் இரட்டைக்குடியுரிமை விவகாரம் காரணமாக, கொன்சர்வேட்டிவ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அலெக்சாண்டர் தனது பதவியை இன்று (சனிக்கிழமை) ராஜினாமாச் செய்துள்ளார்.

அவுஸ்ரேலிய அரசியலமைப்பில், இரட்டைக்குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரட்டைக்குரியுரிமை வைத்துக்கொண்டு சட்டரீதியற்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகிய அவுஸ்ரேலிய துணைப் பிரதமர் பார்னாவை ஜோய்ஸ் உட்பட 6 அரசியல்வாதிகள், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஒக்டோபர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, இரட்டைக்குடியுரிமை விவகாரம் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அலெக்சாண்டரும் ராஜினாமாச் செய்துள்ள நிலையில், பிரதமர் மல்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) அரசாங்கம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg