Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவீடன் வானொலியில் ஐ.எஸ். அமைப்பினரின் பாடல் ஒலிபரப்பு

In ஐரோப்பா
Updated: 10:38 GMT, Nov 11, 2017 | Published: 10:38 GMT, Nov 11, 2017 |
0 Comments
1301
This post was written by : Suganthini

சுவீடனிலுள்ள மிகவும் பிரபல்யமான வானொலிச் சேவையொன்றில், திடீரென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் ஆட்சேர்ப்பு பற்றிய பாடலொன்று ஒலிபரப்பாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வானொலிச்சேவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலைநேர ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 30 நிமிடங்கள்வரை இந்தப் பாடல் ஒலித்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்தியொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த வானொலிச்சேவையின் அலைவரிசையை இடைமறித்து இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டதாக வானொலி நிலைய அதிகாரிகள் நம்புகின்றனர்.

இது தொடர்பில் அவ்வானொலி நிலையத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், எமது வானொலிச்சேவையின் அலைவரிசையானது, இனந்தெரியாதோரால் இடைமறிக்கப்பட்டு, இப்பாடல் ஒலிபரப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg