Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவில் காணி அபகரிப்பிற்கு பொது அமைப்புகள் எதிர்ப்பு!

In இலங்கை
Published: 11:14 GMT, Nov 11, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Ravivarman

முல்லைத்தீவு, மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர், சுமாா் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அத்துமீறிப் பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக அக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்திலே மீள்குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை ஆக்கிரமித்து வேலி அமைக்க முடியும் எனவும் குறித்த அமைப்புக்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

இக்காணி அரச காணி எனத் தெரிவிக்கும் பொது அமைப்புகள், குறித்த நபரின் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சட்ட நடைமுறைகளுக்கப்பால் தனிநபர் ஒருவர் பெருமளவு காணியினை கையகப்படுத்த முயல்வதன் பின்னணியில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் துணையாக உள்ளனரா எனவும் மாங்குளம் பொது அமைப்புகள் வினா எழுப்பியுள்ளன.

இந்த செயற்பாட்டிற்கு எதிராக எதிராக அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாங்குளம் பொது அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_3342 IMG_3343 IMG_3336

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)