Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2025இல் அனைவருக்கும் வீடு: சஜித்

In இலங்கை
Published: 17:37 GMT, Nov 11, 2017 |
0 Comments
1285
This post was written by : Ravivarman
112455594sajith-premadasa-

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டில் அனைவருக்கும் வீடு என்ற கருத்திட்டக் கனவு நிறைவேறும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2025இல் நாட்டினது மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும். இதற்கென இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கு கடந்த ஆண்டை விட 66 வீதத்திற்கும் அதிகமான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வீடமைப்புத்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி அதன் முழுமையான பிரதிபலன்களை நாட்டின் ஏழை மக்களுக்குக் கிடைப்பதற்கு வழியமைத்துள்ளோம்” என அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg