Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்தில் ஹான்ஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

In இலங்கை
Published: 10:41 GMT, Nov 12, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Elakkiya

புத்தளம் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹான்ஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளி-ரஹ்மத் கிராமத்தில் குறித்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, முந்தல் பொலிஸாரால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஹான்ஸ் போதைப்பொருள் அடங்கிய சிறியளவிலான 600 பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 27 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டு மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை (ATM) ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் தும்பலசூரியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் நாளைய தினம் அவரை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

IMG_5325

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg