Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்தில் டெங்கு தாக்கத்தை குறைக்க சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

In இலங்கை
Published: 11:03 GMT, Nov 12, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Elakkiya

புத்தளம் நகரில் அண்மைக்காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நேற்றைய தினம் உத்தியோகபூர்வ டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு நகரின் முக்கிய இடங்கள் பலவற்றில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் உலமா சபை ஆகியவற்றின் தலைமையில் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், நகரசபை, முப்படை மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து  இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்தன.

இதன்போது, வீடுகளுக்குள்ளும் வெளியிலும் டெங்கு நுளம்புகள் முட்டையிடக் கூடிய இடங்கள் விசேடமாக சோதனையிடப்பட்டதுடன் மக்களுக்கு சுகாதார பரிசோதர்களின் வழிகாட்டல்களும் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.

புத்தளம் நகரில் கர்ப்பிணித் தாய்ரமார்களும் சிறுவர்களுமே அதிகளவில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் மாத்திரம், புத்தளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 250 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நொவம்பர் முதல் வாரத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 50 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

IMG-20171111-WA0013 IMG-20171111-WA0016 IMG-20171111-WA0015

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg