Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனங்களுக்கிடையிலான நல்லுறவிலேயே கிழக்கின் எதிர்காலம் தங்கியுள்ளது: ரோஹித போகொல்லாகம

In இலங்கை
Published: 13:09 GMT, Nov 12, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

பல்லின மக்கள் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம், இனங்களுக்கிடையிலான நல்லுறவிலேயே தங்கியுள்ளதென கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போபொல்லாகம தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் மாக்ஸ் அம்மையாருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவுக்குமிடையிலான சந்திப்பு, ஆளுநர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி, தேசிய நல்லிணக்க விவகாரங்கள், கிழக்கு மாகாணத்தில் தென்னாபிரிக்காவின் முதலீட்டு முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறித்த சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர், தேசிய நல்லிணக்கம் தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொண்டு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கு தமது நாடு பூரண ஆதரவை வழங்குமென தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இதற்கு நன்றி தெரிவித்த கிழக்கு ஆளுநர், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தென்னாபிரிக்காவின் முயற்சிகளை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)