Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்ப்புக்கு மத்தியில் பிலிப்பைன்ஸுக்கு ட்ரம்ப் விஜயம்

In
Published: 13:01 GMT, Nov 12, 2017 |
0 Comments
1228
icon_com
This post was written by : Suganthini

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ள நிலையில், அவர் பிலிப்பைன்ஸை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றடைந்துள்ளார்.

ஆசிய நாடுகளுக்கு 12 நாட்களைக் கொண்ட சுற்றுப்பயணத்தை முன்னெடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸுக்குச் சென்றுள்ளார்.

இவரது விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மணிலாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு நெருங்கிச்செல்வதைத் தடுக்க முற்பட்ட பொலிஸார், அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

இதேவேளை, பிலிப்பைன்ஸில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் மாநாட்டிலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொள்வதுடன், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டூடேர்டேயை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg