Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவு செலவுத் திட்டம் எதிரணியின் வாயை அடைக்கும்: மனோ கணேசன்!

In இலங்கை
Published: 17:48 GMT, Nov 12, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Ravivarman

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இறம்பொடை தொண்டமான் கலாசார மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2018ம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டமானது இந்த நாட்டில் அனைத்து மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக அமையும். இந்த வரவு செலவு திட்டத்தில் மலையகம் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு வாழ் மக்கள் தனித்து சொந்த வீடுகளில் வாழும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

சூழலுக்கு ஏற்ப தனிவீடுகள் அமைக்கப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய வசதி இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏற்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் வாதப் பிரதிவாதங்கள் நாடாளுமன்றத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம்பெறும். இதன்பின் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அபிவிருத்தி திட்டங்கள் இவர்களுக்குக் கிட்டும். அந்த நிலையில் எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் எதிரணியின் வாய் அடைக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனா காலத்தில் இருந்து நிலையான அரசியல் யாப்பு அனைத்து மக்களையும் காப்பாற்றக் கூடிய வகையில் அமைந்திராத இந்தச் சூழ்நிலையில், புதிய அரசியல் யாப்பு அனைத்து மக்களையும் காக்கக் கூடிய வகையில் அமைந்திருப்பது அனைத்து மக்களாலும் வரவேற்கத்தக்க கூடியதாக இருக்கும்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

DSC09513 DSC09509 DSC09505 DSC09504 DSC09503 DSC09491

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg