Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடி ஊடகங்களுக்கு பின்னால் இருந்து செயற்படுகிறார்: ராகுல்காந்தி!

In இந்தியா
Updated: 18:03 GMT, Nov 13, 2017 | Published: 04:21 GMT, Nov 13, 2017 |
0 Comments
1223
This post was written by : Kemasiya
21-1432196278-rahul343-600

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஊடகங்களுக்கு பின்னால் இருந்து இயக்குகின்றனர் என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அபாஜி நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த அவர்,

எனது நற்பெயரை கெடுக்க, பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனாலும் அதில் பா.ஜ.க. ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

காங்கிரஸ் எப்போதுமே தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும். ஆனால் பா.ஜனதாவோ அல்லது பிரதமர் மோடியோ, தங்களது தவறை எப்போதும் ஒப்புக் கொள்வதில்லை.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில் காரணம் ஆவார்.

என்னை பற்றி கண்ணியக் குறைவாக விமர்சித்து என் மீதுள்ள நற்பெயரை கெடுக்கும் முயற்சிக்கு, பதிலடி தரும் சக்தியை சிவபெருமான் எனக்கு அளித்து இருக்கிறார். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg