Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்புக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோதல்

In
Published: 06:59 GMT, Nov 13, 2017 |
0 Comments
1264
icon_com
This post was written by : Elakkiya

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிலாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலகம் அடக்கும் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய தலைவர்களின் மாநாடு இடம்பெறும் பிலிப்பைன்ஸ் சர்வதேச மாநாட்டு மண்டபத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை கலகம் அடக்கும் பொலிஸார் தடுக்க முற்பட்டபோதே இந்த மோதல் ஏற்பட்டது.

இதன்போது,  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக நீர்த்தாரை பிரயோகம் மற்றும் தடியடி மேற்கொள்ளப்பட்டது.  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

‘யுத்தம் வேண்டாம். ட்ரம்ப் வேண்டாம். அமெரிக்க துருப்புக்களை ஆசியாவிலிருந்து வெளியேற்று’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றிருந்ததனர்.

மணிலாவில் இன்று ஆரம்பமாகியுள்ள தென்கிழக்கு ஆசிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் சென்றுள்ள நிலையில் இத்தகைய ஆர்ப்பாட்ட பேரணிகளால் சற்று பதற்றமான சூழ்நிலையே நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg