Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படகு விபத்தில் மேலும் அதிகரித்துள்ள உயிரிழப்பு! (3 ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 14:17 GMT, Nov 13, 2017 | Published: 07:50 GMT, Nov 13, 2017 |
0 Comments
1272
icon_com
This post was written by : Kemasiya

ஆந்திரா மாநிலத்தில் உள்ள பவானி தீவில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்ட படகு கிருஷ்ணா நதியருகில் கவிழ்ந்ததில்  இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்றுவரும் மீட்பு பணியில், உயிரிழந்தவர்களில் 9 பேர் பெண்கள் எனவும் 6 பேர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படகில் 38 சுற்றுலா பயணிகளும் 2 படகு ஓட்டுநர்களும் உள்ளடங்களாக மொத்தம் 40 பேர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

படகு கவிழ்ந்ததில் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு: தொடர்ந்தும் தேடுதல்! (2 ஆம் இணைப்பு)

ஆந்திரா மாநிலத்தில் உள்ள பவானி தீவில் இருந்து, 38 பயணிகளை ஏற்றி சுற்றுலா சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், 17 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தை அடுத்து, மீட்பு பணியினர் மேற்கொண்ட தேடுதலில், இன்று காலை 13 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மேலும் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த விபத்து சம்பவித்த இடத்திற்கு, அம் மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று பார்வையிட்டதுடன். குறித்த விபத்து குறித்து மேலதிக தேடுதலை மேற்கொள்ள, சிறப்பு மீட்பு படையை நியமித்துள்ளார்.

அத்துடன் இவ் விபத்து குறித்த மேலதிக விசாரணையை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு: கிருஷ்ணா நதியில் சோகம்!

ஆந்திரா மாநிலத்தின் விஜயாவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து, பவித்ர சங்கமம் என்னும் இடத்திற்கு சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்ததில், படகில் பயணித்த 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது

இப்ராகிம் என்னும் இடத்தில், கிருஷ்ணா நதியில் செல்லும் வேளையில், படகு ஆட்டம் கண்டதில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  நள்ளிரவு 12.00 மணியளவில்  இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதை நேரில் பார்த்த மக்கள், மீட்பு படையினருக்கு அளித்த தகவலை அடுத்து, அங்கு விரைந்து வந்த படையினர் இது வரையில் 13 பேரின் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.

மேலும் அதிகளவிலான படையினர் அழைக்கப்பட்டு, மீட்புபணிகள் தொடர்ந்தும் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)