Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செம்பியன்பற்று சுந்தரேஸ்வரன் ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வு!

In ஆன்மீகம்
Published: 13:28 GMT, Nov 13, 2017 |
0 Comments
1146
icon_com
This post was written by : Ravivarman
IMG_3312

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்குக் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான அருள் மிகு அண்ணமார் சிவகாமி சமேத சுந்தரேஸ்வரன் ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது.

யாழ். வடமாராட்சி கிழக்கு மருதங்கேணி செம்பியன்பற்றுத் தெற்கில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மேற்படி ஆலயம் கடந்த கால யுத்தம் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டு வழிபாடுகளற்ற நிலையில் காணப்பட்டது.

மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த ஆலயம் கிராம மக்களாலும் அப்பகுதி இளைஞர்களாலும் மிகக்குறுகிய காலத்தில் நிரந்தரக் கட்டடம் அமைக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது.

கடந்த 30 ஆம் திகதி கிரியா பூஜைகளுடன் ஆரம்பமாகி 31ஆம் திகதி எண்ணைக்காப்புச் சாத்தப்பட்டு 1ஆம் திகதி கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து மேற்படி அண்ணாமார் சிவகாமி அம்பாள் சமே சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வு காலை 8.00 மணிக்கு விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளன.

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பிரதம குரு பிரதிஸ்ரா பிரதம குரு சாமசிறி தேசமானிய நாகநாத சிவகலாநிதி சிவசிறி சிறிஸ்கந்தராஜக்குருக்கள் தலமையில் சங்காபிசேக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதில் பெருமளவான பக்தர்கள் ஊர் மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_3293 IMG_3237 IMG_3223 IMG_3197 IMG_3194

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)