Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோல்ப் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்!

In இலங்கை
Published: 17:54 GMT, Nov 13, 2017 |
0 Comments
1091
icon_com
This post was written by : Ravivarman
DSC_6768

11 ஆவது உலக பாதுகாப்பு சபையின் கோல்ப் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் இன்று (திங்கட்கிழமை) காலை திருகோணமலை சீனக்குடா ஈகிள் கோல்ப் லிங்க் விளையாட்டு மைதானத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.

அட்மிரல் ரவீந்த்திர விஜி குணவர்த்தன தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கையின் முப்படைத்தளபதிகளுடன், பல நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைவீரர்களும் பங்கேற்றனர்.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை குறித்த கழகத்தினால் முன்னெடுக்கப்படும் இவ் விளையாட்டுப் போட்டிகளில் 1947ஆம் ஆண்டுமுதல் இலங்கை உறுப்புரிமை பெற்றுள்ளதுடன், குறித்த கழகத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் 1ஆவது போட்டியும் இதுவாகும்.

குறித்த போட்டிகளில் பஹறேன், கனடா, எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஸ்பெயின், உகாண்டா, அமெரிக்கா, சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

மேற்படி போட்டிகள் நாளை 12ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

DSC_6817 DSC_6811 02

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)