Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கடற்படையினர் தமிழக மீனவா்கள் மீது துப்பாக்கி பிரயோகம்!

In இந்தியா
Published: 06:35 GMT, Nov 14, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Kemasiya
dfd

இந்திய கடலோர காவல் படையினர் நடத்திய,  துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ராமேஸ்வரம் துறை முகத்திலிருந்து,  சுமார் 450 க்கும் மேற்பட்ட விசை படகுகளில்,  மீன்வர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் கச்சைதீவருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கையில்,  இலங்கை கடற்படையினர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பலான,  மீன்பிடி சாதனங்களை சேதபப்டுத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதனால் தமிழக கரையை நோக்கி  அவசரமாக திரும்பிக் கொண்டிருந்த மீனவா்களை  இந்திய கடலோர காவல் படையினர் வழிமறித்துள்ளனா். எனினும், மீனவா்கின் படகுகள் நிறுத்தப்படாத நிலையில், இந்திய கடற்கடை றப்பா் குண்டுகளினால் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால்,  அந்தோணிபிச்சை என்னும் மீனவர் உட்பட,  மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  இச்சம்பவத்தை கண்டித்தும்  துப்பாக்கி சூட்டு நடத்திய கடலோர காவல் படை அதிகாரிகளை கைதுசெய்ய வலியுறுத்தியும் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கை தொடர்பில்  மீனவர் சங்கங்கள்  அவசர ஆலோசனை கூட்டம் நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

dfgedfgg

 

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)