Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலி அணி உலகக் கிண்ணத் தகுதியை இழந்தது!

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:07 GMT, Nov 14, 2017 | Published: 05:07 GMT, Nov 14, 2017 |
0 Comments
1386
This post was written by : Surenth

2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடும் வாய்ப்பை இத்தாலி கால்பந்து அணி இழந்துள்ளது.

சுவீடன் அணிக்கும் இத்தாலி அணிக்கும் இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் தகுதிகாண் போட்டி சமநிலையில் முடிவுற்றதையடுத்து, புள்ளிகளின் அடிப்படையில் இத்தாலி அணி அதற்கான தகுதியை இழந்துள்ளது.

32 நாடுகள் பங்கு கொள்ளவுள்ள குறித்த கால்பந்துத் தொடர், அடுத்த வருடம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தகுதிகாண் போட்டிகள் சுவீடனில் நடைபெற்று வருகின்றன.

இதில், முதல்போட்டியில் சுவீடனை எதிர்த்த இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. இதனையடுத்து, இத்தாலி இரண்டாவது போட்டியில் 2 -0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற வேண்டும் என்றநிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டி சமநிலையில் முடிவுற்றதன் காரணமாக இத்தாலி 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ணத் தொடருக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

1958ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக இத்தாலி உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg