Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் நிலநடுக்கம்: இதுவரை 400க்கும் அதிகமானோர் உயிரிழப்பு- மீட்புப் பணிகள் தொடர்கின்றது

In உலகம்
Updated: 05:25 GMT, Nov 14, 2017 | Published: 05:25 GMT, Nov 14, 2017 |
0 Comments
1394
This post was written by : Elakkiya

ஈரான் மற்றும் ஈராக்கின் வடக்கு எல்லைப் பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. மீட்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இரண்டு நாடுகளுக்கும் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஈரானின் ஹெர்மான்ஷா மாநிலத்தில் மத்தியகிழக்கு நேரப்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் மாநிலத்தில் பாரியளவு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய அதிகாரிகளின் தகவல்களின் பிரகாரம், இராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையினர் உட்பட சுமார் 413 பேர் ஈரானின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஈராக்கில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹெர்மான்ஷா மாநிலத்தின் முக்கிய இரு மருத்துவமனைகளும் நிலநடுக்கத்தினால் சேதமடைந்துள்ளதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 7000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க நிலநடுக்கம் காரணமாக சுமார் 70 ஆயிரம் பேர் வரையில் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நடப்பாண்டில் உலகின் மிகவும் கொடூரமான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg