Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியக் கடற்படையின் மீனவா்கள் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்!

In இந்தியா
Updated: 06:51 GMT, Nov 14, 2017 | Published: 06:51 GMT, Nov 14, 2017 |
0 Comments
1258
This post was written by : Kemasiya

இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து, மத்திய அரசின் அசமந்தப்போக்கு அப்பட்டமாக தெரிய வந்துள்ளதாக  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையினர் தமிழக மீனவா்கள்மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இன்று (செவ்வாய்கிழமை) அவர் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“வேலியே பயிரை மேய்ந்ததைப் போன்று,  இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு மத்திய அரசே காரணம். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதற்கான காரணம்,  அதனால் அவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுதல்,  கைது செய்யப்படுதல் என்னும் சம்பவங்கள் என்பன  தொடர்ந்தும் அரங்கேறிவரும் நிலையில்,  அரசு இந்த விடயத்தில் கண்டுகொள்ளமால் அசமந்தப்போக்காக செயற்படுகின்றது.

இதுவரையில்,  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது,  இந்திய கடற்படை தடுக்கவோ அல்லது வேறு வகையில் எதிர்க்கவோ முற்படவில்லை.

இவ்வாறிருக்கையில் இந்திய கடற்படையினரே மீனவர்களை சுடுவது  மன்னிக்க முடியாத குற்றமாகும்.” என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா்ளை இலங்கைக் கடற்படையினர் துரத்திய நிலையில் இந்திய கடற்படையினர் றப்பா் குண்டுகளை பயன்படுத்தி  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரண்டு மீனவா்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg