Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாயகத்திலும் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்க வேண்டும்: முன்னாள் போராளிகள் கோரிக்கை!

In இலங்கை
Updated: 17:57 GMT, Nov 14, 2017 | Published: 06:53 GMT, Nov 14, 2017 |
0 Comments
1560
This post was written by : Ravivarman

புலம்பெயர் உறவுகள் தாயகத்திலும் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் துப்பரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் போராளிகளே மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வுத் தளபதிகளில் ஒருவராக செயற்பட்டவரும் புனா்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவா்களின் ஒன்றியத் தலைவருமான அன்பு என்று அழைக்கப்படும் இன்பராசா ஆதவனுக்கு தெரிவிக்கையில்,

”எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்தினை முன்னிட்டு இந்த துயிலுமில்லத்தினை துப்பரவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் நிதிப்பற்றாக்குறையுடனும், ஆளணிப்பற்றாக் குறையுடனும் நாம் மேற்படி துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். இதனை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னா் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்த துப்பரவுப் பணிகளுக்கு திருகோணமலை மக்களின் உதவியை எதிா்பாா்க்கின்ற அதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதி புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கௌரவிப்பு நிகழ்வினை நாம் வரவேற்கின்றோம். ஆனால், தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்களையும் முன்னாள் போராளிகளையும் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளையும் புலம்பெயர் உறவுகள் மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg