Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய வர்த்தக அமைச்சரின் இந்திய வருகை: நிதியமைச்சருடன் சந்திப்பு!

In இந்தியா
Published: 07:24 GMT, Nov 14, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Kemasiya

கனேடிய வர்த்தக அமைச்சர், ‘பிரான்சுவா பிலிப் சாம்பெய்ன்’ மற்றும் இந்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கான இரண்டு நாள் அரச முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்த, கனேடிய வர்த்தக அமைச்சர், இந்தியாவின் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து, இந்திய-கனேடிய வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

மேலும் 2014 ஆம் ஆண்டில் இந்தியா–கனடாவிற்கிடையிலான வர்த்தக நடவடிக்கை, 30 சதவீதத்தால் அதிகரித்தமையும், அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு தொடக்கம், 6.3. பில்லியனாக வருடாந்த வர்த்தக நடவடிக்கை இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்தியாவிற்கான தனது பயணத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், கனேடிய வர்த்தக அமைச்சர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)