Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக தலைவர்களுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

In இந்தியா
Updated: 08:43 GMT, Nov 14, 2017 | Published: 08:43 GMT, Nov 14, 2017 |
0 Comments
1357
This post was written by : Kemasiya

உலக நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும் அமைந்திருந்ததாகவும் குறிப்பாக நண்பர் ஷின்சோ அபேவை சந்தித்து, இரு நாட்டு உறவுநிலை, பொருளாதாரம் மற்றும் மக்களுக்கிடையிலான உறவினை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளார்.

கிழக்காசிய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று (செவ்வாய்க்கிழமை) பிலிப்பைன்ஸின் மணிலாவில் இடம்பெற்ற ஆசிய சங்க கூட்டத்தின் போது, பல்வேறு நாட்டு தலைவர்களுடனும், ஒரே நேரத்தில் சந்திப்பை மேற்கொண்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே  இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,

புரூனேயின் பிரதமர் சுல்தான் ஹஸனல் போல்கியாவை சந்தித்ததில் மகழ்ச்சி எனவும்,  குறித்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவுநிலையின் விரிவாக்கம் குறித்து பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று நியூசிலாந்து பிரதமர், Jacinda Ardern உடனான சந்திப்பின் போது,  இருநாட்டு பொருளாதார மற்றும் கலாச்சரா ஒத்துழைப்பு குறித்து பேசியிருந்ததாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் வியட்நாம் பிரதமர் Nguyen Xuan Phuc உடனான சந்திப்பில்,  இருநாட்டு நட்புறவை மேம்படுத்தல் மற்றும் இந்திய மக்களின் நிலைமை குறித்து விவாதித்திருந்தோம்  எனவும் ஏனைய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பை எண்ணி தான் மகிழ்வுறுவதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

final...

 

 

 

 

 

 

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg