Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது!

In இலங்கை
Updated: 08:56 GMT, Nov 14, 2017 | Published: 08:50 GMT, Nov 14, 2017 |
0 Comments
1153
This post was written by : Ravivarman

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இளைஞனைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து மொனறாகலை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் குறித்த பயணியின் பயண பொதியினை சோதனை செய்த போது அதில் 2 கிலோ 155 கிராம் கேரளா கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா பொலிஸார் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கயஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2 கிலோகிராம் கஞ்சா கனகராயன்குளத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலைமையிலான குழுவினரே கயஸ் வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இதன்போது வாகன சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் இன்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg