Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் காற்றின் மாசு அதிகரிப்பு: மக்கள் இடப்பெயர்வு!

In இந்தியா
Published: 09:45 GMT, Nov 14, 2017 |
0 Comments
1210
This post was written by : Kemasiya

டெல்லியில் காற்றின் நச்சுத்தன்மை அதிகரித்து காணப்படுவதால், அப் பகுதி மக்கள் கிராமங்களை விட்டு வேறு இடங்களுக்கு குடியேறி வருவதாகவும்,  மேலும் அதிகமானோர் டெல்லியை விட்டு வெளியேறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று (செவ்வாய்கிழமை)  பொதுமக்களை சந்தித்த ஊடகவியலாளர்கள்,  குறித்த நிலமை தொடர்பில் வினவிய போதே,  அவர்கள் மேற்படி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

காற்றில் படர்ந்துள்ள நச்சுத்தன்மை,  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால்,  பொதுமக்கள் சுவாச நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் 73 ரயில் போக்குவரத்து தாமதமாக இடம்பெற்றள்ளதோடு,  10 ரயில்கள் பயணிக்கவில்லை.

மேலும் விமானங்களும் புறப்படுவதில் தாமதம்,  மற்றும் தடை ஏற்பட்டமையினால்,  பயணிகள் பெரிதும் அவதியுறுவதாக தெரியவருகின்றது.

இந் நிலையில்,  குறித்த பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில்,  கட்டுமானப் பணிகள் போன்ற கடினமான தொழில்களை மேற்கொள்வதற்கு, பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg